பச்சை மிளகாய் - மருத்துவக் குணங்கள்


உணவில் காரத்திற்காகச் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளைக் கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலைக் குறைக்க இனிமேல் ஜிம்மிற்குச் சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் பச்சை மிளகாயைச் சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளைக் கரைத்துவிடுகிறது. மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்டப் பொருள். ஆகவே, இந்தப் பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும். அதிகளவில் உட்கொள்ளாமல் அளவோடு உட்கொள்வோம்..