உடல் வலியைப் போக்கும் வெந்நீர் !!


பெரும்பாலானோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தங்கள் குழந்தைகளுக்கும் இதைப் பழக்கப்படுத்துகிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீரினை அருந்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. தாகம் எடுக்கும் போது பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சு டான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடிப்பதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும். விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும். ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிக்க வேண்டும். மேலும் ஜலதோஷம் பிடித்தவர்கள் வெந்நீர் குடிப்பதன் மூலம் ஜலதோஷம் விரைவில் குணமடையும். வெந்நீரில், விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பில் இருந்து விடுதலை பெறலாம். திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாமல் ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். ஏனெனில் அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி உண்டாகும். பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பின்பு, பாதங்களை பியு மிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். நெய் மற்றும் எண்ணெய் இருந்த பாத்திரங்களை கழுவும்போது, வெந்நீரில் ஊற வைத்து, பின்பு கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று இருக்கும். இருமல் மற்றும் சளி ஏற்பட்டால், நம் தொண்டையின் டான்சிலில் அதிக வலி ஏற்படும். அப்போது, வெந்நீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். நீர்மமாக உள்ள சளியைக் கெட்டியாக்கி வெளியேற்றும். மேலும், நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, இரத்தக் குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலின் இரத்த ஓட்டமும் மேம்படும். கால் சு டு பொறுக்குமளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும். தரைகளை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடைப்பதன் மூலம் கிருமி இல்லாத சுத்தமான தரையினைப் பெற முடியும். இதனால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட் அல்லது பு ரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும். உணவும் செரித்துவிடும். மேலும் காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்றால் ஒரு டம்ளர் வெந்நீரை உடனே குடியுங்கள். இதன் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்ய முடியும்.