ஆலு பாலக் கட்லெட் செய்முறை :


தேவையானவை : பசலைக்கீரை – ஒரு சிறு கட்டு உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்) பிரெட் ஸ்லைஸ்கள் – 4 பச்சை மிளகாய் – 4 இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன் பிரெட் தூள் – சிறிதளவு மைதா மாவு – அரை கப் சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை : கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய்,இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்றை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து, டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.