⁠⁠⁠சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்


ஒரு சின்ன வெங்காயத்தை ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு, இதய நோய் ஆகிய பிரச்சனை இருப்பவர்கள் மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் ஜலதோஷம் குறைவதுடன் அடிக்கடி வரும் தும்மலும் நின்று விடும். இதய நோயாளிகளுக்கு இது போன்ற பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக செய்யலாம். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர் மோரில் சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். தலை பகுதியில் வழுக்கை விழுந்தவர்களுக்கும், முடி முளைக்காமல் இருப்பவர்களுக்கும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் காலப்போக்கில் முடி முளைக்கும். மேலும், தேள் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் வராமல் தடுக்கலாம். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சுடாக்கி இளம் சுட்டில் காதில் விட்டு வந்தால், காது இரைச்சல் மறையும். வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். மேலும் வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.