சளி குறைய செய்ய வேண்டியவை


பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும். வெற்றிலைச் சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளி குறையும். தூதுவளைச் சாற்றையும் நெய்யையும் ஒன்றாகக் கலந்து கோஷ்டம் பொடியை அதனுடன் சேர்த்து குழைத்து இரண்டு பாகமாக்கி வேளைக்கு ஒரு பாகமாகக் காலை,மாலை என சாப்பிட்டு வந்தால் சளி குறையும். தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.