கரிசலாங்கண்ணியின் மருத்துவ நன்மைகள்!


கரிசலாங்கண்ணி என்றாலே கூந்தல் பராமரிப்புதான் முதலில் நம் கண் முன் வந்து நிற்கும். கரிசலாங்கண்ணி ரத்தத்தைச் சுத்தம் செய்து, ரத்த உற்பத்திக்கு உதவும். சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும். கரிசலாங்கண்ணியை துவையலாகவும் கூட்டாகவும் செய்வார்கள். கரிசலாங்கண்ணியை அரைத்து சாறு எடுத்து அதை தோசை மாவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். கல்லீரலுக்குச் சிறந்த உணவு. கல்லீரலை வலுப்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, அழகான உடலமைப்பைப் பெற உதவும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிகக் குருதிப் போக்கைக் கட்டுப்படுத்தும்.