ஒரு வரியில் இயற்கை மருத்துவ குறிப்புகள்!


இளைத்த உடல் பெருக்க மிளகு. பொடுகைப் போக்க தயிரில் குளி. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு. இதயப் பலவீனம் போக்க மாதுளை. வெள்ளை வெட்டை தீர அன்னாசி. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண். பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும். வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும். மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள். மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும். கருப்பை நோய்க்கு வாழைப்பூ. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும். மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.