உடல் சோர்வு நீங்க


குளிர்ந்த நீரில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து, அதிகாலை வேளையில், சில நாட்கள் தொடர்ந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும். முருங்கைகீரையை காம்புடன் ரசம் வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் அசதி குறையும். பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும். ஒரு டம்ளர் அண்ணாசிப் பழச்சாறுடன், மிளதுத்தூள் சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் சோர்வு குறையும். கம்பை கூழாக்கி அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடையலாம். உலர்ந்த திர்ட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம், முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம். பேரிச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, ஊறிய பேரிச்சம் பழத்தையும், அந்த தண்ணீரையும் குடிக்க சோர்வு குறையும். அகத்திக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெற்று சுறுசுறுப்புடன் இருக்கும்.